உலகம்

அசர வைத்த விமானப்படையின் சகாச நிகழ்ச்சி; பார்த்து வியந்த சீன மக்கள்

30th Sep 2021 12:07 PM

ADVERTISEMENT

சீனா விமானப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆயுத தொழில்நுட்பங்கள் ஆகியவை செவ்வாய்கிழமை அன்று முதல்முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில், 15,000 மீட்டர் உயரத்தில் 20 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட பாதுகாப்பு படையின் ட்ரோன் விமானமும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சந்திரனின் சுற்றுப்பாதைக்கு 25 டன் பளுவை தூக்கி செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டை 13 ஆவது சீன சர்வதேச விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சீன விண்வெளி கழகம் திட்டமிட்டிருந்ததாக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சாகச நிகழ்ச்சி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவிருந்தது. பின்னர், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

போர் விமானங்கள், ராணுவ தொழில்நுட்பம், ட்ரோன்கள், இதர வன்பொருள்கள் ஆகியவற்றை இராணுவத்திற்கு அர்ப்பணிக்க ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கோடிக்கணக்கான டாலர்களைக் செலவழித்துவருகிறது. 

ADVERTISEMENT

முன்கூட்டியே எச்சரிக்கை விடும் ரேடார் வசதி, வானிலிருந்து கீழ் நோக்கி தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்பட பல ஆயுதங்களை ஏந்தி செல்லும் வகையில் இரண்டு டர்போ ஃபான் என்ஜின்களால் இயக்கப்படும் சிஎச் - 6 ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது என சீன விண்வெளி அறிவியல் கூடம் தெரிவித்துள்ளது. சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் முதல் முறையாக புதிய ஏவுகணைகளை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.

இதையும் படிக்ககோவா முன்னாள் முதல்வர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்

சிஎச்-817 என்ற சிறிய வகை ட்ரோன் விமானத்தை மக்கள் பார்வைக்கு வைக்க சீனா விண்வெளி அறிவியல் கழகம் திட்டமிட்டுள்ளது. 800 கிராம் எடை உள்ள இந்த ட்ரோன் விமானத்தை ராணுவ வீரர்கள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பெரிய ரக ட்ரோன் விமானங்களிலிருந்து இந்த சிறிய ட்ரோன் விமானங்களை இயக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Tags : China drone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT