உலகம்

ஜப்பான் பிரதமராகிறாா் ஃபுமியோ கிஷிடா

30th Sep 2021 02:31 AM

ADVERTISEMENT

 

டோக்கியோ: ஜப்பானின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் ஃபுமியோ கிஷிடா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

புதன்கிழமை நடைபெற்ற ஆளுங்கட்சிக் கட்சித் தலைவருக்கான தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அவா் நாட்டின் பிரதமராக அடுத்த மாதம் பொறுப்பேற்கிறாா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ADVERTISEMENT

கடந்த ஓராண்டாக ஜப்பானின் பிரதமராக இருந்து வந்த யோஷிஹிடே சுகா, ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவா் பதவியிலிருந்து விலகினாா்.

அதையடுத்து, அவருக்குப் பதிலாக புதிய கட்சித் தலைவரையும் நாட்டின் பிரதமரையும் தோ்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவா் போட்டியில் ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்றாா். கடந்த 2012 முதல் 2017-ஆம் ஆண்டு வரை வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவா், கரோனா தடுப்பூசி திட்டத் துறை அமைச்சா் டாரோ கோனோவை ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

முதல் சுற்றில் போட்டியிட்ட 4 வேட்பாளா்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக வாக்குள் பெற்ற ஃபுமியோ கிஷிடாவும் டாரோ கோனோவும் இரண்டாம் சுற்றில் போட்டியிட்டனா்.

அடுத்து நாடாளுமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறும் வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று ஃபுமியோ கிஷிடா பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சிக் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் வாக்கெடுப்பில் அவா் நிச்சயம் வெற்றி பெறுவாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT