உலகம்

ஈக்வடார் சிறை மோதல்: பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு

30th Sep 2021 11:06 AM

ADVERTISEMENT

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் குயாக்வாலி நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் கடந்த திங்கள்கிழமை(செப்-28)இரவு கைதிகளுக்குள் நடந்த மோதலில் இதுவரை 116 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு மோசமான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்குள் மோதல் வெடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 23,529 பேருக்கு கரோனா: 311 பேர் பலி

இந்நிலையில் ஈக்வடார் நாட்டின் முக்கிய சிறைகளில் ஒன்றான குயாக்வாலி சிறைச்சாலையில் ’லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்கிற இருதரப்பு கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் சம்பவ இடத்திலேயே 24 பேர் பலியானதோடு 48 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்டத் தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று(செப்-30) இதுவரை மோதலில் 116 கைதிகள் பலியானதாகவும் அதில் 5 பேர் தலை துண்டிக்கப்பட்டதாகவும் சிறைத் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இத்தாக்குதலில் கத்திகள் , துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் அம்மாகாண காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிட்டதட்ட 5 மணி நேர போராட்டதிற்குப் பின்பே கலவரத்தை அடக்கியிருக்கிறார்கள்.

Tags : prison attack ecuadar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT