உலகம்

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

30th Sep 2021 04:38 PM

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டின் இஷினோமாகி பகுதியில் இன்று(செப்-30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 54 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

நிலநடுக்கத்தில் அதிர்வுகளை மக்கள் உணர்ந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

முன்னதாக நேற்று(செப்-29) ஜப்பானின் கடலோரப் பகுதியில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : japan earth quake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT