உலகம்

உலகம் முழுவதும் கரோனாவால் 23.18 கோடி பேர் பாதிப்பு

30th Sep 2021 02:26 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும்  நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23.18 கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.29 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.92 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிக்க | பஞ்சாபில் நடைபெறும் அதிரடி அரசியல் திருப்பங்கள்

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.36 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.47 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளாக பிரேசில்- 2.13 கோடி , இங்கிலாந்து - 77.90 லட்சம் , ரஷியா - 73.05 லட்சம் , பிரான்ஸ் -70.8 லட்சம் ,  துருக்கி - 70.32 லட்சம் , அர்ஜென்டினா- 55.45 லட்சம்  , ஈரான்- 55.18 லட்சம் , கொலம்பியா - 49.45 லட்சம் பேர் என்கிற எண்ணிக்கையில் இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை - பிரேசில் (5,95,316   ) இந்தியா  (4,47,194), மெக்ஸிகோ  (2,75,450), பெரு  (1,99,314), ரஷியா  (2,01,854),  இந்தோனேசியா  (1,41,709), இங்கிலாந்து  (1,36,736) இத்தாலி  (1,30,807), கொலம்பியா  (1,26,219), பிரான்ஸ்  (1,17,348)  ஈரான் (1,19,759) , அர்ஜென்டினா (1,15,038)

இதன் மூலம் உலகளவில் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 47.48 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 614.8 கோடி தடுப்பூசிகள்   செலுத்தப்பட்டுள்ளன.

Tags : World covid vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT