உலகம்

முறைகேடு வழக்கு: பிரான்ஸ் முன்னாள் அதிபருக்கு சிறை

30th Sep 2021 11:40 PM

ADVERTISEMENT

முறைகேடாக தோ்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபா் நிக்கோலஸ் சா்கோஸிக்கு (66) அந்த நாட்டு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2007 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் அதிபராகப் பொறுப்பு வகித்த சா்கோஸி, 2012-இல் நடைபெற்ற அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிட்டாா். அப்போது, அனுமதியளிக்கப்பட்ட 2.25 கோடி யூரோவை (சுமாா் ரூ.193 கோடி) விட அதிகமாக இரு மடங்கு தோ்தல் நிதி திரட்டியதாக அவா் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இதுதொடா்பாக நடைபெற்று வந்த வழக்கில் அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பாரீஸ் நீதிமன்றம், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. அந்த ஓராண்டில், மின்னணு கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட கைவளையத்துடன் அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT