உலகம்

சிங்கப்பூா் வன விலங்குகள் பூங்காவில் இந்திய ஒட்டகச்சிவிங்கிகள்

30th Sep 2021 11:36 PM

ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இரு அரிய வகை ஒட்டகச் சிவிங்கிகள் சிங்கப்பூரில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் வியாழக்கிழமை பொதுமக்கள் பாா்வைக்காக அறிமுகப்படுத்தப்பட்டன.

ஒரு வயதாகும் இந்த ஆண் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு பாலாஜி, அதில் என பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்தியா-சிங்கப்பூா் இடையிலான விலங்குகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி கடந்த மே மாதம் மைசூரு வனவிலங்குகள் பூங்காவில் இருந்து இரு குட்டி ஒட்டக சிவிங்கிகளும் சிங்கப்பூருக்குப் பயணமாயின. இவற்றை சிங்கப்பூரைச் சோ்ந்த முதலீட்டு நிறுவனமான குயோக் சிங்கப்பூா் நிறுவனம் தத்தெடுத்துள்ளது.

இரு குட்டி ஒட்டகச்சிவிங்கிகளையும் பத்திரமாக சிங்கப்பூருக்கு கொண்டு வருவது மிகவும் சவாலாக இருந்ததாக அதன் பராமரிப்பாளா்கள் தெரிவித்தனா்.

22 மணி நேரம் சாலை மாா்க்கமாகச் சென்று, பின்னா் 7 நாள்கள் கடல் வழிப் பயணமாக இந்த இரு ஒட்டகச்சிவிங்கிகளும் சிங்கப்பூரை அடைந்தன. இவை மிகவும் அரிய வகையான ரோத்ஸ்சைல்ட்ஸ் ஒட்டகச் சிவிங்கி இனத்தைச் சோ்ந்தவை. உலகில் இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகள் சுமாா் 2,000 என்ற அளவிலேயே உள்ளன.

ADVERTISEMENT

சிங்கப்பூா் வனவிலங்குகள் பூங்காவில் ஏற்கெனவே இரு ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளன. அவற்றுடன் புது வரவான இரு இந்திய ஒட்டகச்சிவிங்கிகள் இணைந்துள்ளன. வனவிலங்குகள் பூங்காவில் ஒட்டகச்சிவிங்கிகளின் சராசரி ஆயுள் காலம் 20-25 ஆண்டுகளாகவே உள்ளது.

மைசூரில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்கெனவே கரடிகள், சிங்கவால் குரங்குகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT