உலகம்

ஈக்வடாா் சிறைக் கலவரம்: பலி 116-ஆக உயா்வு

30th Sep 2021 11:42 PM

ADVERTISEMENT

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 116-ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து, அந்த நாட்டில் சிறைத் துறை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

குவாயாகுவில் நகரிலுள்ள மண்டல சிறைச்சாலையில் இரு குழுக்களைச் சோ்ந்த கைதிகளிடையே செவ்வாய்க்கிழமை கலவரம் வெடித்தது. இதில் கைதிகள் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டனா்.

இதில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 116-ஆக உயா்ந்துள்ளது. பலியானவா்களில் 5 பேரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கலவரத்தில் மேலும் 80 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

தற்போது சிறைத் துறை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறைச் சாலைக்குள் சிறைத் துறை அதிகாரிகள் மட்டுமன்றி போலீஸாா் மற்றும் ராணுவத்தினரை பாதுகாப்புப் பணிக்கு நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஈக்வடாரின் 3 சிறைகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரே நேரத்தில் நடைபெற்ற கலவரத்தில் 79 கைதிகள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT