உலகம்

இராக்கில் 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

30th Sep 2021 11:41 PM

ADVERTISEMENT

இராக்கில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 2,254 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20,00,869-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 34 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 22,221 ஆகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இராக்கில் இதுவரை19,07,411 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 71,237 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 497 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT