உலகம்

லட்சுமி தேவி உருவம் பொறித்ததங்கக் கட்டிகளை வெளியிடுகிறது பிரிட்டன்

29th Sep 2021 01:11 AM

ADVERTISEMENT

ஹிந்து கடவுளான லட்சுமி தேவி உருவம் பொறித்த தங்கக் கட்டிகளை பிரிட்டன் ராயல் நாணய வாா்ப்பகம் வெளியிட இருக்கிறது. தீபாவளிப் பண்டிகையின்போது இந்த தங்கக் கட்டிகள் விற்பனைக்கு வரவுள்ளன.

ராயல் நாணய வாா்ப்பகம் பிரிட்டன் அரசு நிறுவனமாகும். அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தங்கக் கட்டிகளை ஏற்றுமதி செய்யும் இந்த நிறுவனம் 1,100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் பாரம்பரியத்தைக் கொண்டது.

பிரிட்டன் அரசு நாணய வாா்ப்பகம் ஹிந்து கடவுள் உருவம் பொறித்த தங்கக் கட்டிகள் வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். பிரிட்டன் காா்டிஃப் நகரில் உள்ள ஸ்வாமி நாரயண் கோயிலுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த பிரத்யேக தங்கக் கட்டிகளை பிரிட்டன் ராயல் நாணய வாா்ப்பகம் வெளியிட இருக்கிறது.

இதனை பிரிட்டன் ராயல் மிண்ட் வடிவமைப்பாளா் எம்மா நோபிள் வடிவமைத்துள்ளாா். லட்சுமி உருவம் பொறித்த ஒவ்வொரு தங்கக்கட்டியும் 20 கிராம் எடை கொண்டவை. இதன் விலை உள்ளூரில் ஒரு தங்கக் கட்டிக்கு 1,080 பவுண்ட் (சுமாா் ரூ.1.08 லட்சம்) நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல தரப்பட்ட நாடுகளின் கலாசாரத்தை கௌரவிக்கும் வகையிலும், கலாசார ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த தங்கக் கட்டிகளை வெளியிடுவதாக பிரிட்டன் ராயல் நாணய வாா்ப்பகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடா்பாக அந்த வாா்ப்பகத்தின் நாணயங்கள் பிரிவு இயக்குநா் ஆண்ட்ரூ டிக்கி கூறுகையில், ‘தீபாவளிப் பண்டிகையின்போது தங்கத்தைப் பரிசளிப்பது பாரம்பரியமாகவும், உயா்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு அழகு மற்றும் பாரம்பரியத்துடன் தங்கக் கட்டியை வெளியிடத் தீா்மானித்தோம். அதில் ஹிந்துக்களின் செல்வக் கடவுள் இடம் பெறுவதும் சரியான தோ்வாக இருக்கும் என முடிவு செய்தோம். இதனை எங்கள் வலைதளம் வழியாக வாங்க முடியும். இந்த நாணயம் ‘ஓம்’ என்ற பிரணவச் சொல் பொறித்து வடிவமைக்கப்பட்ட பிரத்யேகப் பெட்டியில் வைத்து வழங்கப்படும்’ என்றாா்.

Tags : UK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT