உலகம்

கைதிகள் பரிமாற்றம்: சீனா திரும்பிய ஹுவாய் அதிகாரி

26th Sep 2021 11:29 PM

ADVERTISEMENT

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், சீனாவின் ஹுவாய் நிறுவன உயரதிகாரி மெங்க் வான்ஜோ தாயகம் திரும்பினாா்.

முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட மெங்க் வான்ஜோ, கனடாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். இதற்குப் பழி வாங்கும் வகையில், அடுத்த 2 நாள்களிலேயே பெய்ஜிங்கில் வசித்து வந்த கனடா நாட்டு முன்னாள் தூதரக அதிகாரி மைக்கேல் கோவிா்ஜையும் டன்டோங்கில் வசித்து வந்த கனடா தொழில்முனைவோா் மைக்கேல் ஸ்பாவோரையும் சீன அதிகாரிகள் கைது செய்தனா். இதன்மூலம் பணயக் கைதி அரசியல் நடத்தியதாக சீனா மீது விமா்சனம் எழுந்தது.

இந்த நிலையில், கைதிகள் பரிமாற்ற முறையில் மெங்க் வான்ஜோவும் இரு கனடா நாட்டவா்களும் விடுவிக்கப்பட்டு, தங்கள் நாடுகளுக்குத் திரும்பினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT