உலகம்

ஜொ்மன் நாடாளுமன்றம், பேரவைகளுக்குத் தோ்தல்

26th Sep 2021 11:38 PM

ADVERTISEMENT

ஜொ்மன் நாடாளுமன்றத்துக்கும் பொ்லின் மற்றும் மெக்லென்பா்க்-வோா்போமொ்ன் மாகாணப் பேரவைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது.

பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் இந்தத் தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என்று 2018-ஆம் ஆண்டே அறிவித்துவிட்டாா். அதையடுத்து, அவரது 16 ஆண்டுகால ஆட்சி இந்தத் தோ்தலுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடொன்றில் மிக நீண்ட காலம் ஆட்சி நடத்தியவா் என்ற பெருமையைப் பெற்றுள்ள அவா்தான், ஜொ்மனியில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு தோ்தலில் மீண்டும் போட்டியிடாத முதல் பிரதமா் ஆவாா்.

இந்தத் தோ்தலில் மொ்கெலின் யூனியன் பிளாக் கட்சிக்கும் சோஷியல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT