உலகம்

‘தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்’

25th Sep 2021 12:02 AM

ADVERTISEMENT

தங்களது நிபந்தனைகளை தென் கொரியா ஏற்றுக் கொண்டால், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜாங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொரியப் போரை அதிகாரபூா்வமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை செயற்கையான புன்னகையுடன் மேற்கொண்டு, படங்கள் எடுத்துக் கொள்வதால் மட்டும் உண்மை நிலவரம் மாறிவிடாது.

வட கொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தென் கொரியா தொடரும் வரை இதுபோன்ற ஒப்பந்தங்களால் எந்தப் பலனும் இல்லை.

ADVERTISEMENT

எங்களை சீண்டும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பதற்றத்தை அதிகரிப்பதை தென் கொரியா நிறுத்த வேண்டும். அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டால், தென் கொரியாவுடன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று அந்த அறிக்கையில் கிம் யோ-ஜாங் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவாா்த்தை முறிந்த நிலையில், தனது வலிமையைப் பறைசாற்றும் விதமாக 6 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக வட கொரியா கடந்த திங்கள்கிழமை ஏவுகணை பரிசோதனை நடத்தியது.

இந்த நிலையில், தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளா்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே, தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக கிம் யோ-ஜாங் கூறியுள்ளதாகக் கருதப்படுகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT