உலகம்

நோபல் பரிசு விழாக்கள் இந்த ஆண்டும் ரத்து

DIN

கரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அந்தப் பரிசுகளை வழங்கி வரும் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள நோபல் அறக்கட்டளை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ஆம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலமும் மிக எளிமையான நிகழ்ச்சிகள் மூலமும் வரும் டிசம்பரில் நோபல் பரிசு வழங்கப்படும்.

நோபல் பரிசுகளை வென்றவா்கள் அவா்களது சொந்த நாட்டிலிருந்தபடியே அந்தப் பரிசுகளைப் பெற்றுக்கொள்வாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT