உலகம்

சோமாலியா: 30 ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கு திறப்பு

DIN

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ‘நேஷனல் தியேட்டர்' 30 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (செப்-23) திறக்கப்பட்டது.

சோமாலியாவில் நிலவி வரும் கடும் பஞ்சம் மற்றும் அரசியல் குழப்பங்களால் தீவிரவாத குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உள்நாட்டிலேயே மக்கள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளானதால் கடந்த 1991 ஆம்  ஆண்டு முதல் அந்நாட்டில் திரையரங்குகள் மூடப்பட்டன.

தற்போதும் அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவி வந்தாலும் 30 ஆண்டுகள் கழித்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக தலைநகரின் பெரிய திரையரங்கமான ‘நேஷனல் தியேட்டர்’ நேற்று திறக்கப்பட்டது.

முதல் நாளில் இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இதனை பார்வையாளர்கள் ரசித்ததுடன் திரையரங்கில் புகைப்படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT