உலகம்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகள் விதிப்பு

24th Sep 2021 06:03 PM

ADVERTISEMENT

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வரும் வாரம் முதல் அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. 

கரோனா மூன்றாவது அலை காரணமாக சில நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இதனால் அடுத்த வாரம் முதல் சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

அதேநேரத்தில் அங்கு நகரங்களில் தடுப்பூசி செலுத்துவதும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 50 முதல் 59 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

Tags : singapore coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT