உலகம்

அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

24th Sep 2021 09:12 PM

ADVERTISEMENT

அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
ஐ.நா. பொதுச் சபை கூட்டம், நாற்கரக் கூட்டமைப்பின் மாநாடு (க்வாட்) உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை புறப்பட்டு அமெரிக்கா சென்றாா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற உலகளாவிய கரோனா தடுப்பு உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி மூலம் பங்கேற்றுப் பேசினாா். 

இதையும் படிக்க- சென்னையில் 26ஆம் தேதி 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள்

அதனைத்தொடர்ந்து அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸையும் ஆஸ்ட்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனையும் அவர் சந்தித்தார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
இருதரப்பு உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, வணிகம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் இந்த சந்திப்பின்போது விவாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

Tags : Joe Biden
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT