உலகம்

வேலையின்மை: ஆப்கனில் முன்னாள் காவலர் தற்கொலை

24th Sep 2021 04:48 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானின் வேலையின்மை காரணமாக முன்னாள் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ஆப்கனின் கிழக்கு குனார் மாகாணத்தைச் சேர்ந்த முன்னாள் காவலர் ஷேக்கர்(38). தலிபான் வசம் ஆப்கன் சென்றதன் காரணமாக இவர் வேலை இழந்துள்ளார். மேலும் முந்தைய அரசும் அவருக்கு மூன்று மாத சம்பளம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. 
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த அவருக்கு உறவினர்கள் உதவி செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் மனமுடைந்த முன்னாள் காவலர் ஷேக்கர் நேற்று தற்கொலை செய்துகொண்டார் என டோலா செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க- '6 மாதத்துக்கு பெண்களின் துணியை துவைத்துக் கொடு' : பாலியல் குற்றவாளிக்கு தண்டனை

தற்கொலை செய்துகொண்ட காவலருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் 7 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : suicide Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT