உலகம்

இலங்கை கரோனா: ரூ.737 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்

23rd Sep 2021 04:36 PM

ADVERTISEMENT

இலங்கையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நாளுக்கு நாள் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

முன்னதாக வருகிற அக்.1 வரை நாடு முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிதிப் பற்றாக்குறை காரணமாக உலக வங்கியிடம் இலங்கை அரசு நிதி உதவி கேட்டிருந்தது.

இதையும் படிக்க | ஈரோடு: கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி

கரோனாவை வெல்ல ஒரே வழி தடுப்பூசி தான் என்பதால் அதை உற்பத்தி செய்வதற்காக உலக வங்கியை அணுகியிருந்தார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனாவைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு 100 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.737 கோடி) வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்திருக்கிறது.

இலங்கையில் இதுவரை கரோனாவால் 5.08 லட்சம் பேர் பாதிப்படைந்திருக்கிறார்கள். தொற்றின் தீவிரத்தால் 12,376 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

மேலும் 1.18 கோடி பேருக்கு முதல் தவனை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில்  91 லட்சம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக் கொண்டார்கள். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 51 சதவீதம் ஆகும். 

Tags : covid srilanga
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT