உலகம்

ரஷியாவில் புதிதாக 820 பேர் கரோனாவுக்குப் பலி

23rd Sep 2021 03:13 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 820 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,438 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,354,995 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று மட்டும் 820 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 201,445 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ரஷியாவில் கரோனா பலி 817 ஆகவும் பாதிப்பு 19,706 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 3,445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாஸ்கோவில் நேற்றைய பாதிப்பு 1,991 என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி 594,770 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 16,567 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,558,780 ஆக உயர்ந்துள்ளது. 

Tags : coronavirus corona update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT