உலகம்

நைஜீரியா : வயிற்றுப் போக்கால் 329 பேர் பலி

23rd Sep 2021 12:48 PM

ADVERTISEMENT

நைஜீரியாவின் கனோ மாகாணத்தில்  இந்தாண்டு மார்ச் முதல் தற்போது வரை வயிற்றுப் போக்கால் 329 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் அடிக்கடி நிகழும் வயிற்றுப் போக்கு நோயானது இந்தாண்டு மிகத்தீவிரமாக நைஜீரிய நாட்டை பாதித்திருக்கிறது. தற்போது வரை  23 மாநிலங்களில் 67,903 பேருக்கு காலரா நோய் தாக்கியிருப்பதாகவும் அதில் 2,423 பேர் பலியாகியிருப்பதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிக்க | 54 ஆயிரம் பேரை தேடிக் கொண்டிருக்கிறது குருகிராம் சுகாதாரத் துறை

இந்நிலையில் கனோ மாகாணத்தில் இதுவரை 11,475 பேர் வயிற்றுப் போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 329 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இதுகுறித்து நாட்டின் நோய் தடுப்புத் துறை அதிகாரி சிக்வே ஹெக்வேசு , ' வயிற்றுப் போக்கால் பலியானவர்களில் 5 - 14 வயதுள்ள குழந்தைகளே அதிகம் .இறப்பு விகிதமானது ஆண்கள் 51 சதவீதமாகவும் பெண்கள் 49 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது' என  சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

ஒழுங்கற்ற சுகாதாரம் , மக்கள் நெருக்கம் , கனமழையால் உருவான குட்டை நீர்கள் , குப்பைகள் நிறைந்த பகுதிகள் மூலம் காலரா கட்டுக்கடங்காமல் பரவியிருக்கிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags : nigeria cohlera
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT