உலகம்

தடுப்பூசி கொள்கை: இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் என்னதான் பிரச்சனை?

DIN

குறிப்பிட்ட நாடுகளில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக கருதப்படுவார்கள் என பிரிட்டன் புதிய பயண விதிகளை வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட பயண விதிகளின்படி, அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தபடாமல் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். 

ஆனால், பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தபோதிலும் 10 நாள்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தல் உள்பட கடும் கட்டுப்பாடுகளை சந்திக்கவுள்ளனர். இந்த விதிகளானது அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

பிரிட்டனில் ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்தி கொண்டபோதிலும் குறிப்பிட்ட நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருவோர் இம்மாதிரியான கட்டுப்பாடுகளை சந்திக்கவுள்ளனர். சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு ஏற்கனவே கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் வெளியிட்ட சிவப்பு பட்டியலில் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனில் பயன்படுத்தப்படும் கணிசமான தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.

இதனிடையே, சிவப்பு பட்டியலிலிருந்து இந்தியா கடந்த மாதம் நீக்கப்பட்டது. இது விதிகள் பாகுபாடாக உள்ளது என்றும் இதற்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா எச்சரித்திருந்தார். 

இதற்கு மத்தியில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரிட்டன் கொள்கையை மாற்றியமைத்தது. இருப்பினும், தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.

அதாவது, பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டால் அவர்களை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களாக கருதப்படுவார்கள். ஆனால், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொண்டால் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களாக கருதப்படமாட்டார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT