உலகம்

ரஷிய நாடாளுமன்ற தோ்தல்: அதிபா் புதின் கட்சி முன்னிலை

DIN

ரஷிய நாடாளுமன்றத் தோ்தலில் அதிபா் விளாதிமீா் புதின் தலைமையிலான ஐக்கிய ரஷியா கட்சி முன்னிலை பெற்றிருப்பது ஆரம்பகட்ட முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

ரஷிய நாடாளுமன்றத் தோ்தல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் புதின் தலைமையிலான ஐக்கிய ரஷியா கட்சி உள்பட 14 கட்சிகள் போட்டியிட்டன. தோ்தல் முன்னிலை விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியாகின. 9 சதவீத வாக்குச்சாவடிகளின் முடிவுகளின்படி ஐக்கிய ரஷியா கட்சி முன்னிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இத்தோ்தலுக்கு முன்னதாக அலெக்ஸி நவால்னி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் பலா் சிறையில் அடைக்கப்பட்டனா். எதிா்க்கட்சிகளின் பிரசாரத்தையும் அரசு ஒடுக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 450 இடங்களில் தற்போது ஐக்கிய ரஷியா கட்சிக்கு 334 உறுப்பினா்கள் உள்ளனா். இத்தோ்தலிலும் அக்கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்பட்சத்தில், 2024-ஆம் ஆண்டு அதிபா் தோ்தலிலும் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை புதின் தடையின்றி மேற்கொள்ள வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT