உலகம்

உலகம் முழுவதும் 590 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

DIN

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

உலகம் முழுக்க இதுவரை   கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22.84 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.20 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.77 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.34 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.44 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(செப்-19) நிலவரப்படி 590.6 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :

சீனா - 211.9 கோடி

இந்தியா - 80.6 கோடி

ஐரோப்பா ஒன்றியம் -60 கோடி

அமெரிக்கா - 38.6 கோடி 

பிரெசில் - 20.07 கோடி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT