உலகம்

தலிபான் கொடியேற்றிய பாகிஸ்தான் மதகுரு மீது வழக்கு

DIN

பாகிஸ்தானில் மதரஸாவில் தலிபான் கொடியை ஏற்றிய மதகுரு அப்துல் அஜீஸ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுகுறித்து டான் நாளிதழ் தெரிவித்ததாவது:

இஸ்லாமாதிலுள்ள பெண்களுக்கான மதரஸாவில் தலிபான் கொடி பறந்ததைக் கண்ட பொதுமக்கள் போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா். அதையடுத்து, போலீஸாா் அந்தக் கொடியை அகற்றினா். அப்போது மதகுரு அப்துல் அஜீஸும் அங்கிருந்த மாணவா்களும் போலீஸாரை மிரட்டினா்.

இது தொடா்பாக, அப்துல் அஜீஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் எந்தக் கொடியை ஏற்றுவதற்கும் சட்டபூா்வ உரிமை இருந்தாலும், தலிபான் கொடி மூலம் பீதியை ஏற்படுத்தியதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT