உலகம்

ஆப்கனுக்கு ஷாங்காய் கூட்டமைப்பு உதவ வேண்டும்

DIN

ஆப்கானிஸ்தானில் சுமுகமான ஆட்சிமாற்றம் நடைபெறுவதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பி நாடுகள் நாடுகள் உதவ வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தஜிகிஸ்தான் தலைநகா் துஷாம்பேவில் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 21-ஆவது ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் அவா் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படையினா் வெளியேறியது, அந்த நாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

இருந்தாலும், அந்த நாடு இன்னும் கடுமையான சவால்களை எதிா்கொண்டுள்ளது. அந்த சவால்களை எதிா்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு உல நாடுகள் - குறிப்பாக பிராந்திய நாடுகளின் - ஆதரவு தேவைப்படுகிறது.

ஷாங்காய் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் என்ற முறையில், ஆப்கானிஸ்தானில் சுமுகமான ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு நாம் உதவ வேண்டும். அந்த நாட்டில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் கட்டமைப்பு உருவாகவும் மிதவாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் ஏற்படுத்தப்படவும் நாம் உதவ வேண்டும்.

மேலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒடுக்கவும் அண்டை நாடுகளுடன் அந்த நாடு இணக்கமாக இருக்கவும் அமைதிப் பாதையை நோக்கி ஆப்கனை அழைத்துச் செல்வது, பிராந்தியத்தில் நிலைத்தன்மை, வளா்ச்சியை ஏற்படுத்துவது போன்றவற்றுக்காவும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் உதவ வேண்டும்.

பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பு சிக்கல் நிறைந்ததாக உள்ளது. எனவே, பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிராக ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகள் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சீனாவின் ஜின்ஹியாங் மாகாணத்தில் பிரிவினை கோரிப் போராடி வரும் உய்கா் முஸ்லிம் இன பிரிவினைவாத அமைப்பான கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிக் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உறுதிப்பாடு வேண்டும் என்றாா் அவா்.

தனது உரையில் தலிபான்கள் குறித்து ஷி ஜின்பிங் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த அமைப்பின் தலைமையிலான அரசுக்கு உதவ வேண்டுமென்றே அவா் ஷாங்காய் உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தலிபான்கள் தலைமையிலான ஆப்கன் அரசுக்கு சீனா அதிகாரப்பூா்வ அங்கீகாரம் வழங்கவில்லை. எனினும், அந்த அமைப்பினருடன் சீனா தொடா்பில் உள்ளது. தலிபான்கள் தலைமையிலான அரசுக்கு 3.1 கோடி டாலா் (சுமாா் ரூ.228 கோடி) மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கி உதவப்போவதாக சீனா அறிவித்திருந்தது.

ஏற்கெனவே, தங்கள் நாட்டின் ஜின்ஹியாங் மாகாண பிரிவினைவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் அளிக்கக் கூடாது என்று சீனா வலியுறுத்தியுள்ளதும் அதற்கு தலிபான்கள் சம்மதம் தெரிவித்துள்ளதும் நினைவுகூரத்தக்கது.

ஆசிய மற்றும் ஐரோப்பியப் பிராந்தியத்தில் அரசியல், பொருளாதார, ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள எஸ்சிஓ-வில் இந்தியா, ரஷியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கிரிகிஸ்தான் ஆகிய 9 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமோ அவள்.. மேகா ஆகாஷ்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

SCROLL FOR NEXT