உலகம்

பாகிஸ்தான் : கரோனாவால் 27,000 பேர் பலி

16th Sep 2021 05:12 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 27,000 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாகிஸ்தானில்  இதுவரை 27,004 பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க | 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை

நேற்று (செப்-15) நிலவரப்படி புதிதாக 3,012 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 12.2 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,004 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

ADVERTISEMENT

மேலும்  அந்நாட்டில்  7.48 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும்  அதில் 2.88 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள்  எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

Tags : covid Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT