உலகம்

வேலைக்கு செல்ல அச்சப்படும் ஆப்கன் பெண்கள்

12th Sep 2021 03:39 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றி ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், ரபியா ஜமால் என்ற ஆப்கன் பெண் ஒரு கடினமான முடிவை எடுத்திருக்கிறார். தலிபான் பயங்கரவாதிகளின் உத்தரவை மீறி, தான் செய்துவந்த விமான நிலைய பணிக்கு திரும்பியுள்ளார். 

சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே இருக்கும்படி பெண்களுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், மூன்று குழந்தைகளுக்கு தாயான 35 வயது ரபியாவுக்கு பணிக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "குடும்பத்தை நடத்த எனக்கு பணம் தேவைப்படுகிறது. வீட்டில் இருக்கும்போது பதற்றமாக இருந்தது. நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இப்போது, நன்றாக இருக்கிறேன்" என்றார்.

இதையும் படிக்ககுஜராத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன? மூத்த பாஜக தலைவர்கள் சந்திப்பு

காபூல் விமான நிலையத்தில் மொத்தமுள்ள 80 பெண் பணியாளர்களில், தற்போது 12 பெண்கள் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர். தலைநகரில் குறைந்த அளவிலான பெண்களே பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை வேலைக்கு செல்ல வேண்டாம் என தலிபான்கள் எச்சரித்திருந்தனர். 

ADVERTISEMENT

காபூல் விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பணிபுரிந்துவரும் ஆறு பெண் பணியாளர்களில் ஒருவரான ரபியாவின் சகோதரி குட்சியா ஜமாலிடம் பேசுகையில், "காபூலை தலிபான்கள் கைப்பற்றியது எனக்கு அதிரச்சியாக இருந்தது. மிகவும் அச்சப்பட்டேன். எனக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என என் குடும்பத்தினர் அச்சப்பட்டார்கள். ஆனால், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

Tags : Afghanistan Taliban
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT