உலகம்

ரஷியா : கரோனா பலி எண்ணிக்கை 1.85 லட்சமாக உயர்வு

8th Sep 2021 04:57 PM

ADVERTISEMENT

ரஷியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 1.85 லட்சம் பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ரஷியாவில்  இதுவரை 1.85 லட்சம் பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க | ஆப்கனில் 5 பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள்

நேற்று (செப்-7) நிலவரப்படி புதிதாக 17,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 69.5 லட்சமாக உயர்ந்திருக்கிறது.  இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,85,447 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

ADVERTISEMENT

தலைநகர் மாஸ்கோவில் அதிகபட்சமாக 7,911 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

மேலும்  இதுவரை ரஷியாவில்  8.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும்  அதில் 3.88 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள்  எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 26 சதவீதம் ஆகும்.

Tags : russia covid
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT