உலகம்

போராட்டங்களுக்கு தடை விதித்த தலிபான்கள்

8th Sep 2021 01:29 PM

ADVERTISEMENT

அமெரிக்க அரசை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஐநா அமைப்பால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அடங்கிய புதிய அரசை தலிபான்கள் நேற்று (புதன்கிழமை) அமைத்தனர். 1990களில் தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் மூத்த அமைச்சராக இருந்த முல்லா ஹசன் அகுண்ட் இடைக்கால பிரதமராக  அறிவிக்கப்பட்டுள்ளார். 

நாட்டின் பல்வேறு இனங்களை பிரதிபலிக்கும் வகையில் அனைவருக்குமான அரசு அமைக்கப்படும் என தலிபான்கள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், முக்கிய பதவிகள் அனைத்தும் தலிபான்களுக்கும் பல்வேறு பயங்கரமான தாக்குதல்களை நடத்திய ஹக்கானி இயக்க தலைவர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது. அரசில் பெண்களுக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. 

இதுவரை வெளியில் வராத தலிபான் அமைப்பின் தலைவர் ஹசன் அகுண்ட் ஆட்சி அமைத்த பின்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இஸ்லாமிய மற்றும் ஷரியத் சட்டங்களை நிலைநாட்ட கடினமாக உழைக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்கதலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்; துணைப் பிரதமா் முல்லா பராதா்

ADVERTISEMENT

பயங்கரவாதி அமைப்பாக இருந்த தலிபான்கள் அரசின் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து, ஆப்கானிஸ்தானில் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துவருகின்றன. போராட்டங்களை ஆயுதங்கள் கொண்டு அடக்கிய பாதுகாப்பு அலுவலர்கள், மேற்கு பகுதியில் உள்ள ஹெராட் நகரில் இருவரை சுட்டு கொன்றனர். 

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலிபான்களின் செய்தித்தொடர்பாளர், "அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு போராட்டங்கள் குறித்த சட்டங்கள் விளக்கப்படும் வரை யாரும் போராட்டம் நடத்தக்கூடாது" என்றார்.

Tags : Taliban Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT