உலகம்

பின்னடைவை சந்தித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ; கனடா தேர்தலில் வெற்றி யாருக்கு?

8th Sep 2021 03:04 PM

ADVERTISEMENT

தேர்தல் பரப்புரையின்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் போராட்டம் நடத்தினர். தேர்தலுக்கு இன்னும் இரண்டு வார காலமே உள்ள நிலையில், ட்ரூடோ மீது கல் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அவருக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

கனடாவில் செப்டம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என சில வாங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு முன்பு ட்ரூடோவுக்கு சாதகமாகவே சூழல் இருந்தது. குறிப்பாக, அப்போது வெளியான கருத்துக்கணிப்புகளில் லிபரல் கட்சி தலைவர் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் எரின் ஓ டூலை ஒப்பிடுகையில் முன்னிலையில் இருந்தார்.

கரோனா பெருந்தொற்று சிறப்பாக கையாண்டதன் காரணமாக அவர் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என கருதப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் 15ஆம் தடுப்பூசி கட்டாயம் என்ற அரசின் அறிவிப்பு பிறகு, ட்ரூடோவின் தேர்தல் பரப்புரையில் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பது தற்போது கடினமாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக, திங்கள்கிழமை அண்டாரியோ மாகாணம் டோரோண்டோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ட்ரூடோ கலந்து கொண்டார். அப்போது, கரோனா தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்பட்டதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர்.

ADVERTISEMENT

இதையும் படிக்கதலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்; துணைப் பிரதமா் முல்லா பராதா்

பின்னர், ட்ரூடோ மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. ஆனால், அதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல்வீச்சு சம்பவத்தை உறுதிபடுத்திய ட்ரூடோ, "ஆம், என் மீது கல்கள் வீசப்பட்டது. சொல்லப்போனால், எச்சில் துப்ப முயற்சித்தனர். அவர்கள் மிக கோபமாக இருந்தனர். பொருள்களை தூக்கி எறிந்து மற்றவர்களை அச்சுறுத்தினர். இதை ஏற்று கொள்ளவே முடியாது" என்றார்.

Tags : canada justin trudeau
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT