உலகம்

எல் சால்வடார் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக பிட்காயின் அறிவிப்பு

8th Sep 2021 12:05 PM

ADVERTISEMENT

உலகம் முழுவதும் ’கிரிப்டோகரன்ஸி‘ எனப்படும் வடிவமில்லாத இணைய நாணயமான பிட்காயினை தடை செய்திருக்கிற நிலையில் முதன் முதலில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் அதனை நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்திருகிறது.

இதுகுறித்து எல் சால்வடாரின் அதிபர் நயிப் புகேல் டிவிட்டரில் ’ முன்னதாக  200 பிட்காயின்களை வாங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் 200 நாணயங்களை வாங்கியிருக்கிறோம் . மேலும் தரகர்கள் மூலம் அதிக நாணயங்களை வாங்க இருக்கிறோம் என்றதோடு 2001 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்த அமெரிக்க டாலருக்கு பதிலாக இனி பிட்காயினை பயன்படுத்திக் கொள்ளலாம் . அதை வழங்குவதற்கான சட்டரீதியான டெண்டரும் தொடங்கப்படும்‘ எனத் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க | செப்டம்பர்-14 அன்று சந்தைக்கு வரும் ஆப்பிள் ‘ஐபோன் 13’

முக்கியமாக எல் சால்வடாரில் பெரும்பான்மையான மக்கள் பெரிய வங்கிகளை அணுக முடியாத நிலை நிலவுவதால் பிட்காயின் வருகை நாட்டின் நிதிவளத்தை பெரிய அளவில் உயர்த்தும் என பையூ காயின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷிவம் தாக்ரல் கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

மேலும் அவர் , ‘இந்தியாவிலும் நாங்கள் பிட்காயினை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். சட்டரீதியான நாணயமாக மாற்ற முடியாது என்றாலும் கடந்த 3 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து அதிக முதலீடுகள் வருவதால் டிஜிட்டல் சொத்தாக பிட்காயினை பயன்படுத்த அறிவுரை வழங்கியிருக்கிறோம் . மேலும் இந்தியாவில் கிரிப்டோகரன்ஸிக்கான மத்திய வங்கி  வரும் நாளுக்காகவும்காத்திருக்கிறோம் ‘ என தெரிவித்தார்.
 

இந்திய மதிப்பில் ஒரு பிட்காயினின் இன்றைய (செப்-8) விலை 46.75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : bitcoin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT