உலகம்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் சிஐஏ தலைவர் சந்திப்பு

8th Sep 2021 12:09 PM

ADVERTISEMENT

தில்லிக்கு வந்திருந்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை செவ்வாய்கிழமை (நேற்று) சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்த அதே நாளில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஆப்கானிஸ்தான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இச்சந்திப்பில் எதுகுறித்த விவாதிக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. தலிபான்கள் ஆட்சி அமைத்த நிலையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், இந்திய உள்பட பல நாடுகள் தனது தூதரக அலுவலர்களை அங்கிருந்து வெளியேற்றின. ஆனால், பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் தூதரக அலுவலர்களை வெளியேற்றவில்லை.

ADVERTISEMENT

இதையும் படிக்கதலிபான்களின் புதிய அரசு அறிவிப்பு: பிரதமா்-முல்லா ஹசன் அகுண்ட்; துணைப் பிரதமா் முல்லா பராதா்

இந்தியாவை குறிவைத்து தாக்கும் பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானை பயன்படுத்திக்கொள்ள தலிபான்கள் அனுமதிக்கக்கூடாது என இந்திய தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 

Tags : Afghanistan Taliban
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT