உலகம்

தலிபான்களின் புதிய அரசு: விழாவில் பங்கேற்க சீனா, ரஷியா, பாகிஸ்தானுக்கு அழைப்பு

7th Sep 2021 03:48 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தலைமையிலான புதிய அரசை அறிவிக்கும் விழாவில் பங்கேற்க சீனா, ரஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிதானின் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா, துருக்கு உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. இந்நிலையில், புதிய அரசு குறித்த அறிவிப்பை தொடர்ந்து தலிபான்கள் தாமதப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய தலிபான் தலைவர்களில் ஒருவர் கூறியது:

“ஆப்கானிஸ்தானின் புதிய அரசை அறிவிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. சர்வதேச நாடுகள் மற்றும் ஆப்கன் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஆட்சியை அமைக்கவுள்ளோம்.

ADVERTISEMENT

மேலும், புதிய அரசை அறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சீனா, பாகிஸ்தான், ரஷியா, துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் அரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.”

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் நேட்டோ படைகள் பின் வாங்கப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் தலைநகரை கைப்பற்றினார்கள்.

இதையும் படிக்கஇருபாலர் கல்விக்கு தலிபான்கள் தடை: இப்படி மாறிய பல்கலை வகுப்புகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT