உலகம்

அதிகரிக்கும் கரோனா: சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்

7th Sep 2021 08:38 AM

ADVERTISEMENT


பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

புதன்கிழமை முதல், பணியாற்றும் இடங்களில் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மக்களே முன்வந்து கூட்டம் கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சிங்கப்பூர் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே, வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள், அடுத்த 14 நாள்களுக்கு தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கவும், வீட்டிலிருந்து பணியாற்றுவோர், வெளியிடங்களில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்குமாறும், அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த வாரம் புதிதாக 1,200 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த புதிய கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் புதிய பாதிப்பு 600 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT