உலகம்

அமெரிக்க ராணுவ வாகனங்களைக் கைப்பற்றி பேரணி நடத்திய தலிபான்கள்

2nd Sep 2021 03:49 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள் அமெரிக்கப் படைகளின் ராணுவ வாகனங்களைக் கைப்பற்றி பேரணியில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்த கடைசி அமெரிக்கப் படைகள் கடந்த திங்கள்கிழமை அமெரிக்கா திரும்பியது. 

இதையும் படிக்க | ‘தலிபான்களைக் கொண்டாடுவது ஆபத்தானது’: நடிகர் நசிருதீன் ஷா

அமெரிக்க வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்புவதற்கு முன்பாக அமெரிக்கப் படைகளின் ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை செயலிழக்கச் செய்துவிட்டதாக அமெரிக்க அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க அரசுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் மற்றும் ஆயுதங்களை ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனாவால் 21.83 கோடி பேர் பாதிப்பு

அதனைத் தொடர்ந்து அமெரிக்க வீரர்களின் ராணுவ ஆடைகள் மற்றும் ஆயுதங்களைக் கைப்பற்றிய தலிபான்களின் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அமெரிக்க ராணுவ வாகனங்களைக் கொண்டு தலிபான்கள் பேரணி நடத்திய விடியோக்கள் வெளியாகியுள்ளன.

தலிபான்களின் கொடியுடன் ராணுவ வாகன அணிவகுப்பு நடத்தி தலிபான்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT