உலகம்

உலகம் முழுவதும் கரோனாவால் 21.83 கோடி பேர் பாதிப்பு

2nd Sep 2021 03:07 PM

ADVERTISEMENT

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டாலும் அதன் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .

இந்நிலையில் உலகம் முழுக்க இதுவரை   கரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 21.83 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.

உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 3.93 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.42 லட்சம் பேர்  உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனா பலி 45 லட்சத்தைத் தாண்டியது!

ADVERTISEMENT

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.28 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.39 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரேசில் - 2.08 கோடி , பிரான்ஸ் - 68.68 லட்சம், ரஷியா - 68.38 லட்சம் ,  , இங்கிலாந்து - 68.56 லட்சம் , துருக்கி - 64.12 லட்சம் , அர்ஜென்டினா- 51.90 லட்சம்  , ஈரான்- 50.02 லட்சம் , கொலம்பியா - 49.11 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையில்  கரோனா அதிகம்  பாதித்தவர்கள் உள்ள நாடுகளாக இருக்கிறது.

பலியானவர்களின் எண்ணிக்கை - பிரேசில் (581,150  ) இந்தியா  (439,020), மெக்ஸிகோ  (259,326), பெரு  (198,295), ரஷியா  (180,781), இங்கிலாந்து  (133,066), இத்தாலி  (129,290), இந்தோனேசியா  (133,676), கொலம்பியா  (125,016), பிரான்ஸ்  (126,335 ஈரான் (108,393) , அர்ஜென்டினா (111,607)

உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் இதுவரை 532.98 கோடி பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

 

Tags : covid vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT