உலகம்

ஆப்கன் விமான தளத்தை கைப்பற்ற முயற்சிக்கும் சீனா: முன்னாள் அமெரிக்க தூதர் குற்றச்சாட்டு

2nd Sep 2021 05:09 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் விமான தளத்தை கைப்பற்ற சீனா முயற்சிக்கலாம் என அமெரிக்காவின் முன்னாள் மூத்த தூதர் நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, பக்ரம் விமான தளத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயற்சிக்கலாம் என்றும் அமெரிக்கா சீனாவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் முன்னாள் மூத்த தூதர் நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஹேலி ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து மேலும் கூறுகையில், "ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பபெறும் முடிவை அமெரிக்க அவசர அவசரமாக எடுத்ததால் கூட்டு நாடுகளின் நம்பிக்கையை அதிபர் ஜோ பைடன் இழந்துள்ளார். அமெரிக்காவின் முன்பு பல சவால்கள் உள்ளன. 

மக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? சைபர் பாதுகாப்பு வலிமையாக உள்ளதா? என்பதை அமெரிக்க உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், எதிர்த்து போரிடும் துணிச்சலை வெளிப்படுத்தாதால் ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து ஹேக் செய்துவருகிறது. பக்ரம் விமான தளத்தை கைப்பற்ற சீனா முயற்சி மேற்கொள்ளலாம் எனவே தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்த கூட சீனா முயற்சிக்கலாம். எனவே, நமக்கு பல பிரச்னைகள் உள்ளது. 

ADVERTISEMENT

கூட்டு நாடுகளை வலுப்படுத்த வேண்டும். அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நம் ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும். சைபர் குற்றங்களையும் பயங்கரவாத குற்றங்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமோ என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்கஅமெரிக்க ராணுவ வாகனங்களைக் கைப்பற்றி பேரணி நடத்திய தலிபான்கள்

20 ஆண்டுகளாக, அமெரிக்க ராணுவத்தின் கோட்டையாக பக்ரம் விமான தளம் விளங்கியது. ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகள் அங்குதான் நிலைநிறுத்தப்பட்டது. இறுதியாக, அமெரிக்க படை ஜூலை மாதம் அங்கிருந்து வெளியேறியது.
 

Tags : Afghanistan China
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT