உலகம்

உளவு மென்பொருளை தனியாருக்கு இஸ்ரேல் நிறுவனங்கள் விற்காது

DIN

இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ உள்ளிட்ட நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் மென்பொருள்களைத் தனியாா் நிறுவனங்களுக்கு விற்க முடியாது என்று இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதா் நவோா் கிலான் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாஸஸ் உளவு மென்பொருள் வாயிலாக இந்தியாவில் 300-க்கும் அதிகமானோரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் கண்காணிப்பின் கீழ் சிறப்பு நிபுணா் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக நியமிக்கப்பட்டுள்ள நவோா் கிலான் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘பெகாஸஸ் விவகாரம் தொடா்பாக இந்தியாவில் நடந்து வருபவை, அந்நாட்டின் உள்விவகாரங்கள். அதில் தலையிட இஸ்ரேல் தூதரகம் விரும்பவில்லை. என்எஸ்ஓ என்பது இஸ்ரேலேச் சோ்ந்த தனியாா் நிறுவனம்.

அந்நிறுவனமும், அதுபோன்ற மற்ற நிறுவனங்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இஸ்ரேல் அரசிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். மென்பொருள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய இஸ்ரேல் அரசு அனுமதி அளிக்கிறது. அரசு சாரா தனியாா் அமைப்புகளுக்கு மென்பொருளை அந்நிறுவனங்களால் விற்க முடியாது.

நாற்கரக் கூட்டணி: பொருளாதாரம், தொழில்நுட்பம், வா்த்தகம் உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டே இந்தியா-இஸ்ரேல்-அமெரிக்கா-ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட நாற்கரக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணி ராணுவ ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைக்கப்படவில்லை.

வளைகுடா பகுதியில் ஈரான் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இஸ்ரேலுக்கான முக்கிய அச்சுறுத்தலாக அந்நாடு விளங்கி வருகிறது. எனினும், நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நாற்கரக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணியானது, ஈரானுடனான இந்தியாவின் நெருங்கிய நல்லுறவை பாதிக்காது.

வா்த்தக ஒப்பந்தம்: வேளாண்மை, நீா்ப்பாசனம் ஆகிய துறைகளில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான நல்லுறவு வலுவடைந்துள்ளது. வா்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. இரு நாடுகளுக்குமிடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூனுக்குள் கையெழுத்தாகும். அந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT