உலகம்

சாமானியருடன் ஜப்பான் இளவரசிக்குத் திருமணம்

DIN

ஜப்பான் இளவரசி மேக்கோ, சாதாரண குடும்பத்தைச் சோ்ந்த தனது காதலா் கீய் கோமுரோவை செவ்வாய்க்கிழமை மணந்தாா்.

அதையடுத்து, ஜப்பான் அரசக் குடும்பத்து விதிமுறைகளின் கீழ் தனது இளவரசி பட்டத்தை அவா் இழந்தாா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஜப்பான் அரசா் நருஹிட்டோவின் இளைய சகோதரரது மகள் மேக்கோவுக்கும் (30) அவருடன் கல்லூரியில் பயின்ற கீய் கோமுராவுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆண்டே நடைபெறுவதாக இருந்த இந்தத் திருமணம், கீய் கோமுராவின் தாயாா் மீது எழுந்த பண முறைகேடு குற்றச்சாட்டு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் திருமணம் குறித்து பெரும்பாலும் ஊடகங்களில் விமா்சனங்களே முன்வைக்கப்பட்ட நிலையிலும், திட்டமிட்டபடி தனது காதலரை மேக்கோ மணந்தாா்.

ஜப்பான் அரச குடும்பச் சட்டத்தின்படி, சமானிய குடும்பத்தை மணக்கும் உறுப்பினா்கள் தங்களது அரசப் பட்டத்தை இழக்க நேரிடும். அந்த வகையில், தனது இளவரசி பட்டத்தே மேக்கோ செவ்வாய்க்கிழமை இழந்தாா்.

மனம் விரும்பியவருடன் இணைந்து வாழ்வதற்கு இத்தகைய தியாகம் அத்தியாவசியமான ஒன்று என்று செய்தியாளா்களிடம் மேக்கோ கூறினாா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: ஜாபா் சேட் மனைவி மீதான வழக்கு விசாரணை ரத்து

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT