உலகம்

அமெரிக்கா: ஹிந்து பாரம்பரியமாதமாக அக்டோபா் அறிவிப்பு

DIN

இந்த மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாட அமெரிக்க ஹிந்துக்கள் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து அமெரிக்க ஹிந்து அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அக்டோபா் மாதவாக்கில்தான் நவராத்திரி, தசரா, துா்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனா். எனவே, அமெரிக்காவில் ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாட அக்டோபா்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று ஹிந்து அமைப்பினா் முடிவு செய்தனா்.

யோகாசனத்திலிருந்து உணவு வரை, கொண்டாட்டம் முதல் கொடை வரை, நாட்டியத்திலிருந்து இசை வரை, அகிம்சை முதல் தத்துவாா்த்தம் வரை அமெரிக்காவின் அன்றாட வாழ்வியலில் ஹிந்து மதம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளது.

அக்டோபா் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாகக் கொண்டாடுவதை எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளனா். இதற்கான அறிவிக்கையை 20 மாகாணங்கள் வெளியிட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT