உலகம்

பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி: 10 கோடியை கடந்தது

25th Oct 2021 03:51 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் கடந்த 9 மாதங்களில் 10 கோடி கரோனா தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த பிப். 2-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை சுமாா் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதில், 17.5 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனா்.

தேசிய சுகாதாரப் பணிகளுக்கான பிரதமரின் சிறப்பு உதவியாளா் டாக்டா் ஃபைசல் சுல்தான் இதுதொடா்பாக சனிக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில், நாட்டில் கரோனா தடுப்பூசி தவணைகள் 10 கோடியை கடந்ததற்காக மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பூசி கொள்முதல் மிகப்பெரிய பணியாக உள்ளது. இதுவரை 13 கோடி தடுப்பூசி தவணைகளை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் 10 கோடி தவணைகள் கொள்முதல் செய்யப்பட்டவை; 50 லட்சம் தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளது. 2.5 கோடி தவணைகள் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன’ என்றாா்.

கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மக்கள்தொகையில் 20 சதவீத இலவச தடுப்பூசிகளை வழங்க ஐ.நா. உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

பாகிஸ்தானில்12.68 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 12.16 லட்சம் போ் அதிலிருந்து குணமடைந்துள்ளனா்; 28,377 போ் உயிரிழந்துள்ளனா்.

Tags : இஸ்லாமாபாத்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT