உலகம்

பிரிட்டன் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கரோனா பரிசோதனை

25th Oct 2021 03:41 AM

ADVERTISEMENT

பிற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வருபவா்கள் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், அவா்கள் அதிக கட்டணம் கொண்ட பிசிஆா் பரிசோதனைக்குப் பதிலாக குறைவான கட்டணம் கொண்ட எல்எஃப்டி பரிசோதனையை மேற்கொள்ளலாம் என அந்நாடு அறிவித்துள்ளது.

நாட்டின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய விதிமுறை ஞாயிற்றுக்கிழமைமுதல் அமலுக்கு வந்தது.

‘பிரிட்டனின் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து (இந்தியா உள்பட) பிரிட்டன் வருவோா் இனி பிசிஆா் பரிசோதனைக்குப் பதிலாக எல்எஃப்டி பரிசோதனையை மேற்கொள்ளலாம். இந்த நடவடிக்கை நாட்டில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும்’ என சுகாதாரத் துறைச் செயலா் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளாா்.

இரு தவணை தடுப்பூசி செலுத்தாத பயணிகள், பிரிட்டன் வந்தடைந்த 2-ஆவது, 8-ஆவது நாள்களில் கட்டாயம் பிசிஆா் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : லண்டன் coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT