உலகம்

இலங்கைமுன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி

DIN

இலங்கையில் கரோனா கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கத் தயாராகி வரும் அந்த நாட்டு அரசு, முன்களப் பணியாளா்களுக்கு மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சனிக்கிழமை அறிவித்துள்ளது.

அந்த திட்டத்தின் கீழ், அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மூன்றாவது தவணை தடுப்பூசியைப் பெறத் தொடங்குவாா்கள் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் துறை அமைச்சா் சன்ன ஜயசுமணா தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, 60 வயது மேற்பட்டவா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவா் கூறினாா். மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை அரசு நீக்குவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT