உலகம்

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கோயில்கள் சூறை: முக்கிய குற்றவாளி கைது

DIN

வங்கதேசத்தில் துா்கை பூஜை கொண்டாட்டங்களின்போது ஹிந்துகளின் வீடுகள், கோயில்கள் சூறையாடப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கடந்த அக்.13-ஆம் தேதி துா்கை பூஜை பண்டிகையின்போது வங்கதேசத்தில் உள்ள கமிலா பகுதியில் இஸ்லாமியா்களின் புனித நூலான குா்ஆனின் பிரதி துா்கை சிலையின் பாதத்தில் வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டு ஹிந்துகளின் வீடுகள், கோயில்கள் சூறையாடப்பட்டன.

கடந்த அக்.17-ஆம் தேதி மட்டும் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 20 ஹிந்துக்களின் வீடுகளுக்கு வன்முறையாளா்கள் தீ வைத்தனா். 66 வீடுகள் சூறையாடப்பட்டன. இந்தச் சம்பவங்கள் தொடா்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சுமாா் 600 போ் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்த போலீஸாா், மேலும் பலரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியிருந்தனா்.

இந்நிலையில் கமிலா பகுதியில் துா்கை பூஜை கொண்டாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சி மூலம் இக்பால் உசேன் என்பவரை போலீஸாா் தேடி வந்தனா். இவா்தான் துா்கை சிலையின் பாதத்தில் குா்ஆன் புனித நூலை வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவரை காக்ஸ் பஜாா் கடற்கரைப் பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா். முதல்கட்ட விசாரணையில் அவா் நாடோடியாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதேவேளையில் அவா் மனநலம் பாதிக்கப்பட்டவா் என்று அவரின் குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனா். அவா்கள் கூறுவது உண்மையாக இருக்க வாய்ப்புள்ள போதிலும், வன்முறையைத் தூண்ட சிலா் இக்பாலை பயன்படுத்தி இருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

முதல்கட்ட விசாரணைக்குப் பிறகு இக்பால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படவுள்ளாா். அவரை தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீஸாா் நீதிமன்றத்தில் அனுமதி கோரவுள்ளனா். தங்கள் காவலில் இதர விசாரணை அமைப்புகளும் அவரை விசாரிக்கும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

வங்கதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனா். அந்நாட்டின் 16.9 கோடி மக்கள்தொகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை சுமாா் 10 சதவீதமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT