உலகம்

மன அழுத்தத்திலிருந்து குழந்தைகள் மீட்க வீட்டுப்பாடங்களுக்கு தடை விதிக்கும் சீனா

23rd Oct 2021 07:31 PM

ADVERTISEMENT

சீனாவில் குழந்தைகளை மனஅழுத்தத்திலிருந்து பாதுகாக்க  வீட்டுப்பாடங்கள் மற்றும் சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது. 

சீனாவில் சமீப காலமாக குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையிலானோருக்கு மன ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை அந்நாட்டு அரசு தடை செய்து வருகிறது. 

இதையும் படிக்க | டிரோன் தாக்குதலில் அல் கொய்தா முக்கியத் தலைவர் கொலை

சீனாவில் ஏற்கெனவே குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளை வாரத்திற்கு 3 மணி நேரங்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய முயற்சியில் அந்நாடு இறங்கியுள்ளது. 

ADVERTISEMENT

அந்தவகையில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் வழங்குவது, சிறப்பு வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட நடைமுறையைத் தடை செய்வதற்கான சட்டவரைவை சீனா தயாரித்துள்ளது.

மேலும் குழந்தைகள் இணையவெளியில் அதிகம் நேரம் செலவழிப்பதைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதிலும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க | 3-ஆவது தவணைக்கு வேறு தடுப்பூசி: சிடிசி அனுமதி

சட்டவரைவு தயாரிப்புப் பணி முழுமையடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT