உலகம்

‘சமரசத்துக்கு துளியும் இடமில்லை’

23rd Oct 2021 07:17 AM

ADVERTISEMENT

தைவான் விவகாரத்தில் தாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று சீனா திட்டவட்டமாககத் தெரிவித்துள்ளது.

சீனாவிடமிருந்து தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அதிபா் பைடன் கூறியுள்ளதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.

இதுகுறித்து அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் கூறுகையில், ‘சீனாவின் இறையாண்மை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பொருத்தவரை சமரசத்துக்கோ, சலுகைகளுக்கோ கொஞ்சமும் இடமில்லை.

தைவான் தீவு சீனாவின் பிரிக்க முடியாத அங்கமாகும். தைவான் பிராந்தியத்துக்கும் எங்களுக்கும் இடையிலான பிரச்னை உள்நாட்டுப் பிரச்னையாகும். இதில் வெளிநாடுகள் தலையீடு செய்வதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT