உலகம்

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்: சுற்றுலாத் தலங்கள் மூடல்

22nd Oct 2021 05:51 PM

ADVERTISEMENT

சீனாவின் வடக்கு மாகாணங்களில் மீண்டும் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று வைரஸ் முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட நிலையில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அது பரவியது. 
சீனாவில் விதிக்கப்பட்ட தொடர் கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. 

இதையும் படிக்க | முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்

இந்நிலையில் சீனாவின் வடக்கு மாகாணங்களில் மீண்டும் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

வைரஸ் பரவலைத் தடுக்க ஏற்கெனவே 9 மாகாணங்களில் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடிவிபத்து: 16 பேர் பலி

சீனாவின் மங்கோலியா, கன்சூ மற்றும் பெய்ஜிங் பகுதிகளில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. சீனாவில் தற்போது இரட்டை இலக்கங்களில் கரோன தொற்று எண்ணிக்கை இருந்தாலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

Tags : China Coronavirus Covid19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT