உலகம்

ஏமன்: வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 82 பேர் பலி

21st Oct 2021 02:58 PM

ADVERTISEMENT

ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 82 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப்  மாகாணத்தில்  எண்ணை வளம் மிக்க கிணறுகளைக் கைபற்றும் முயற்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுபடுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதையும் படிக்க | 'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

இந்நிலையில் நேற்று (அக்-20) புதன்கிழமை மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டனர். 

ADVERTISEMENT

இதில் அல்-ஜாப்வா மற்றும் அல்-கசாரா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 82 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.அவர்கள் பயன்படுத்திய 11 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டது. 

முன்னதாக கடந்த அக்.17 அன்று ஏமன் - சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில்  ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 165 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags : Yeman saudi hauthis
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT