உலகம்

நேபாளத்தில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 77ஆக உயர்வு

21st Oct 2021 02:16 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் பெய்து வரும் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க | 'பாஜகவால் ஜம்மு-காஷ்மீர் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது': மெகபூபா முப்தி விமரிசனம்

இந்நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை 77 பேர் பலியாகியுள்ளதாகவும் 26 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள நேபாள அரசு காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர் டி20 அணியில் இடம்பெற்றுள்ள ஐபிஎல் போட்டியின் அதிவேகப் பந்துவீச்சாளர்

நிலச்சரிவில் இதுவரை 22 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : Nepal Flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT